தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“ஜாமீன் வழங்குவதே பொதுவான விதி ; சிறையில் அடைப்பது ஒரு விதிவிலக்கு” உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

18 May 2026, 9:21 pm
“ஜாமீன் வழங்குவதே பொதுவான விதி ; சிறையில் அடைப்பது ஒரு விதிவிலக்கு” உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

“ஜாமீன் வழங்குவதே பொதுவான விதி ; சிறையில் அடைப்பது ஒரு விதிவிலக்கு” உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

புதுதில்லி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த வர் சையது இப்திகார் அன்த்ராபி. இவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத நிதி விநியோகக் குழு வில் தொடர்பு இருப்பதாக கூறி ‘உபா’ சட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

5 ஆண்டுகளுக்கு மேலாக சையது சிறையில் உள்ள நிலையில், அவ ரது ஜாமீன் மனுவை ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் தள்ளு படி செய்திருந்தது. இதனை எதி ர்த்து சையது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு மனு திங்களன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாக ரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை க்கு வந்தது.

இருதரப்பு வாதத் திற்குப் பின்பு உச்சநீதிமன்ற நீதிபதி கள்,“உபா வழக்குகளிலும் கூட ஜாமீன் வழங்குவதே பொதுவான விதி. சிறையில் அடைப்பது ஒரு விதிவிலக்கு.

உபா சட்டத்தின் பிரிவு 43 D (5) (இது ஜாமீன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது) காலவரையற்ற சிறைவாசத்தை நியாயப்படுத்த முடியாது.

எந்த வழக்காக இருந்தாலும் அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு உட்பட்டே செயல் பட வேண்டும். இது அரசியலமைப் பின் 21, 22ஆவது பிரிவுகளிலி ருந்து பெறப்பட்ட ஒரு கொள்கை யாகும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றவாளி என நிரூ பிக்கப்படும் வரை, ஜாமீன் வழங்கலாம்.

2021ஆம் ஆண்டு கே.ஏ.நஜீப் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பிணைப்புள்ள சட்டமா கும். அதை விசாரணை நீதிமன்றங் களோ, உயர்நீதிமன்றங்களோ அல்லது உச்சநீதிமன்றத்தின் குறைந்த எண்ணிக்கையிலான நீதி பதிகள் கொண்ட அமர்வுகளோ நீர்த்துப்போகச் செய்யவோ, தவிர்க்கவோ அல்லது புறக்க ணிக்கவோ முடியாது.

அதனால் சையத் இப்திகார் அன்த்ராபிக்கு ஜாமீன் வழங்குகிறோம். அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண் டும். 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜ ராக வேண்டும்” என உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு உத்தர விட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.