ஆரவல்லி: அறிக்கையை ஆய்வு செய்ய குழு
3 Jun 2026, 8:37 pm

ஆரவல்லி: அறிக்கையை ஆய்வு செய்ய குழு

புதுதில்லி ஆரவல்லி மலைத்தொடரின் வரை யறை மற்றும் எல்லைகள் குறித்து ஒன்றிய அரசு சமர்ப்பித்த அறிக்கை யை ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்றம் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.

‘இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கவுன்சில்’ (ICFRE) அமைப்பின் தலைமை இயக்குநர் காஞ்சன் தேவி தலைமையிலான இந்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தனது விரிவான அறிக்கையை 2026 ஆகஸ்ட் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசின் அறிக்கையில் உள்ள “முக்கியமான தெளிவற்ற தன்மைகளுக்கு” (Critical ambiguities) தீர்வு காணுமாறும் இக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) செயலாளர் தலைமையில் தயாரிக்கப்பட்ட அக்டோபர் 2025-ஆம் ஆண்டின் அறிக்கையை நடை முறைப்படுத்துவதற்கு, கடந்த டிசம்பர் 29 அன்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரவல்லி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க, இந்தத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான அமைப்பு மூலம் புதிய அறி வியல் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டைச் செய்வது அவசியம் என்று நீதிமன்றம் அப்போது வலியுறுத்தியிருந்தது. தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, ஒரு “நியாயமான, நடுநிலையான மற்றும் சுதந்திரமான நிபுணர் கருத்தைப்” பெறுவது அவசியம் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஆரவல்லி மலை தொடர்பாக ஒன்றிய அரசு 2025 அக்டோபர் மாதம் ஒரு அறிக்கை சமர்ப் பித்தது. அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட மலைகளுக்கு இடையே 500 மீட்டர் தொலை விற்குள் இருக்கும் பகுதிகளை மட்டுமே ‘ஆர வல்லி மலைத்தொடர்’ என வரையறுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல வரையறைகளைக் கொடுத்திருந்தது.

இந்த வரையறையானது ஆரவல்லியை பாதுகாக்காது. மாறாக அதானி உள்ளிட்ட சுரங்க நிறுவனங்கள் ஆரவல்லியை சூறையாடுவ தற்கு நிறைய வாய்ப்புகளை திறந்து விடும். குறிப் பாக பல மலைகள் சுரங்க நிறுவனங்களின் லாபத்திற்காக அழிக்கப்படும்.

பாலைவனப்புழு திகளை தடுக்கும் இயற்கை அரணாக உள்ள ஆர வல்லி மலைகள் அழிந்தால் அது தில்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் உள்ள மக்கள் புழுதிப்புய லுக்கும் அதிக காற்று மாசுக்கும் ஆளாகும் நிலைமை அரங்கேறும் என நாடு முழுவதும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொ டர்புடைய தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோச னைகளுக்குப் பிறகே இந்த உயர்மட்டக் குழு (HPC) அமைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.