தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎஸ்இ-ஓஎஸ்எம் குளறுபடி மாணவர்களின் விரக்தி கவலை அளிக்கிறது: உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

15 Jul 2026, 9:09 pm
சிபிஎஸ்இ-ஓஎஸ்எம் குளறுபடி மாணவர்களின் விரக்தி கவலை அளிக்கிறது:   உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

சிபிஎஸ்இ-ஓஎஸ்எம் குளறுபடி மாணவர்களின் விரக்தி கவலை அளிக்கிறது: உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

புதுதில்லி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை முன்பு ஆசிரி யர்கள் நேரில் கையில் வைத்துத் திருத்தி வந்தனர். ஆனால், 2026ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஓஸ்எம் (OSM - On-Screen Marking) முறையில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, கணினி மூலம் திருத்தப்பட்டன. இந்த செயல் முறையில் மாணவர்களின் விடைத்தாள் மாற்றம், மதிப்பெண் மதிப்பீடு குறைவு என பல்வேறு குளறுபடிகள் உண்டாகின. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர் பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு (ராகேஷ் பிஞ்சோலா என்பவர், வழக்கறிஞர் லட்சுமிகாந்த் சுக்லா மூலம்) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் (3 நீதிபதிகள் அமர்வு - தலைமை நீதிபதி சூர்யா காந்த், ஜோய்மால்யா பாக்சி, மோகனா) புதனன்று விசாரணைக்கு வந்தது.

75% மதிப்பெண் நிபந்தனை

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,”மாண வர்கள் தேர்வுகளை எழுதிவிட்டு, அதன் முடி வுகளைப் பார்க்கும்போது மதிப்பெண்களில் பெரும் குளறுபடிகள் இருப்பதை உணர்கிறார் கள். காகிதத்தை நேரடியாகத் திருத்தாமல், கம்ப்யூட்டர் திரையில் (OSM) திருத்துவதால், ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்லது முறையான வழிகாட்டுதல் இல்லாததால், தங்க ளுக்குத் தகுதியான மதிப்பெண்கள் கிடைக்க வில்லை என்று ,மாணவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். அதனால், ஆன்லைன் மதிப்பீட்டு முறை மூலம் தேர்வு நடத்துவதற்கான முறை யான புதிய விதிமுறைகளை வகுக்கவும், இச்சீர்திருத்தங்களை மேற்பார்வையிட உயர்மட்டக் கமிட்டியை அமைக்கவும், பாதிக் கப்பட்ட மாணவர்களுக்குக் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு மற்றும் உயர் கல்வி சேர்க்கைக்கான 75% மதிப்பெண் நிபந்த னையில் இருந்து விலக்கு அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோ ரிக்கை விடுக்கப்பட்டது.

கவலை - அதிருப்தி

வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தாவை நோக்கி, “இளம் குழந்தைகளின் விரக்தியின் அளவைப் பாருங்கள். இந்த விவகாரம் எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. ஒரு மாணவர் மதிப்பெண் மாறியிருந்தால் அது தவறு. ஆனால் பல மாணவர்களுக்கு இதே போன்று நடந்துள்ளது. அதனால் இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் ஏதோ ஒரு அமைப்புக் குறைபாடு உள்ளது. சில பிரச்சனைகள் மெல்ல மெல்ல உருவாகி வருகின்றன. இந்தக் கவலை களை நிவர்த்தி செய்ய ஒன்றிய அரசு அதிகாரி களிடமிருந்து உதவியை இந்த நீதிமன்றம் நாட உள்ளது. நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை அரசுக்கு விரோதமானது அல்ல” என குறிப்பிட்டது.

தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா,”மாணவர்களின் புகார்கள் குறித்து அரசாங்கம் தீவிரமாகக் கவ னம் செலுத்தி வருகிறது. இதற்காக எஸ்.ராதா சவுகான் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, மதிப்பீட்டு முறையைச் சீர மைக்கும் பணிகள் நடந்து வருகிறது” என அவர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.