தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி நான் விசாரிக்க முடியாது என்று கூறவில்லை; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மழுப்பல்

24 Jul 2026, 9:07 pm
மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி  நான் விசாரிக்க முடியாது என்று கூறவில்லை; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மழுப்பல்

மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி நான் விசாரிக்க முடியாது என்று கூறவில்லை; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மழுப்பல்

புதுதில்லி நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, தில்லியில் ஜூலை 20 அன்று நாடாளு மன்றம் நோக்கி பேரணியாக சென்ற மாண வர்கள் - இளைஞர்கள் மீது ஒன்றிய உள்து றை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை (தில்லி) வன்முறையை கட்ட விழ்த்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தி யது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஜூலை 22 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட தாகவும், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு,”எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

உங்கள் நேரத்தை யும் வீணாக்காதீர்கள்” என்று கூறி, விசார ணைக்கு ஏற்க மறுத்ததாகவும் செய்திகள் வெளி யானது.

இதற்கு கண்டனங்கள் குவிந்தன.

இளை ஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சித்தவர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சிகளின் கோரிக்கை யை எப்படி ஏற்பார்? என மாணவர்கள் - இளைஞர்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிப தியை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்பட வில்லை; நான் விசாரிக்க முடியாது என்று கூறவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று உச்சநீதிமன்ற திறந்த வெளி நிகழ்வு ஒன்றில் அவர் பேசுகையில், “உச்சநீதிமன்றத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை. நான் பதிவகத்தில் சரி பார்த்தேன்.

உச்சநீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப் படவில்லை. நீதிமன்றத்திற்கு வந்தது வெறும் ஒரு கோரிக்கை மனு மட்டுமே

. அதாவது வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா ஒருவரால் அனுப்பப்பட்ட ஒரு கோரிக்கை மனு மட்டுமே.

அந்தக் கோரிக்கை மனுவை நான் எப்படி ஒரு ரிட் மனுவாக கருத முடியும்? ஆனால் மக்கள் இதைப்பற்றிப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டனர்.

கடந்த இரண்டு நாட்களில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக முற்றி லும் பொய்யான தகவல் பரப்பப்பட்டது.

அந்த வழக்கை விசாரணைப் பட்டியலிடத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் எந்த பொறுப்புணர்வும் இன்றி பொறுப்பற்ற முறையில் தவறான செய்தியை வெளியிட்டன. ஆனால், காலை 10 மணி வரை ஒரு பக்கம் கூட தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை” என அவர் கூறினார்.

திங்களன்று விசாரணை : உச்சநீதிமன்றம் சம்மதம்

தில்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது காவல்துறையின் தாக்குதல் தொடர்பான மனுவை அவசர வழக்காக வரும் திங்கள் (ஜூலை 27) அன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜூலை 22 அன்று நரேந்திர மிஷ்ரா தாக்கல் செய்யப்பட்ட தாக கூறப்படும் மனு,”வாய்மொழி கோரிக்கையாக இருந்தது.

எப்படி விசாரிக்க முடியும்?” உள்ளிட்டவைகளை காரணமாக கூறி விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தற்போது முறையான மனுவை தாக்கல் செய்ததால் விசாரிப்பதாக கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.