முந்தய பக்கம்

தில்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

2 Nov 2026, 9:46 pm
தில்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

தில்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லி-என்சிஆர் பகுதியில் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பான மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேசன், வரலே ஆகியோர்அடங்கிய அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களுக்குப்பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவம்பர் 7, 8 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமேபட்டாசுகளை வெடிக்க அனுமதி உண்டு. இந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 9 முதல் பட்டாசு வெடிப்பதற்கான முழுமையான தடை மீண்டும் அமலுக்கு வரும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகள், நல்வாழ்வு மையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் அமைதி மண்டலங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சுற்றியுள்ள 300 மீட்டர் சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களை ‘பட்டாசு தடைசெய்யப்பட்ட பகுதிகள்’ என அடையாளப்படுத்தி, உரிய அறிவிப்பு பலகைகளை வைத்துத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என கூறினர்.

Share
FacebookXWhatsAppTelegram