வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு 2027 ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
3 Nov 2026, 11:23 pm

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு 2027 ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

புதுதில்லி2025ஆம் ஆண்டின் வக்பு (திருத்தச்) சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்துத் தொடரப்பட்டமனுக்கள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு,”இடைக்காலமனுக்களை தாக்கல் செய்த மனுதாரர்கள் இன்றிலிருந்து (நவ .3) 2 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வ மனுக்களைத்தாக்கல் செய்ய அனுமதி அளிக்கிறோம். இதன் நகல் ஒருங்கிணைப்பு வழக்கறிஞருக்கு வழங்கப்பட வேண்டும்;மனுதாரர்கள் முன்வைக்கும் தீர்ப்புகளைத் தொகுத்துச் சேர்க்குமாறு ஒருங்கிணைப்பு வழக்கறிஞரிடம்அறிவுறுத்துகிறோம்.தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதங்களுக்கு ஒன்றிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்பதிலளிக்க வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும். தொடர்ந்து 2027ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்”என உத்தரவிட்டது.

வக்பு திருத்தச் சட்டம்?

மோடி அரசு கொண்டுவந்துள்ள வக்புதிருத்தச் சட்டத்தில், ஒரு சொத்தை ‘வக்புசொத்து’ என்று வக்பு வாரியமே தன்னிச்சையாகஅறிவிக்கும் அதிகாரத்தை வழங்கிய பிரிவு 40 நீக்கப்பட்டுள்ளது. வக்பு சொத்து குறித்து சர்ச்சை எழுந்தால், அதைஆய்வு செய்து முடிவு செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியங்கள்மற்றும் மத்திய வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இன்றி, நீண்டகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே ஒரு சொத்தை வக்பு சொத்தாக உரிமை கோரும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மனுக்களை தற்போது உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.