தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

1 hour before
வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

SBI வங்கியில் 1500 காலிப் பணியிடங்கள்

State Bank of India (SBI)-யில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியாகி யுள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 1500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டு கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – முதற்கட்டத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினர், ஓபிசி பிரிவி னருக்கு ரூ. 750. எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, காலியிட விபரங்கள் மற்றும் பிற தக வல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. முழுமையான அறிவிப்பை பெற https://sbi.bank.in/web/careers இணையதளத்தைப் பார்வை யிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூலை 8, 2026 ஆகும்.

ரயில்வேயில் 6565 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் Technician Grade-I (Signal) மற்றும் Technician Grade-III ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக Railway Recruitment Board (RRB) தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 6565 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – Technician Grade-I (Signal) பணியிடங்களுக்கு B.E./B.Tech. அல்லது அதற்கு இணையான பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technician Grade-III பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ITI முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : Technician Grade-I (Signal) பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் 18 முதல் அதிக பட்சம் 33 வயது வரையிலும், Technician Grade-III பணி யிடங்களுக்கு 18 முதல் 30 வயது வரையிலும் விண்ணப்பிக்க லாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், அரசு விதிகளின்படி பிற பிரிவினருக்கும் வயது தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (CBT), ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர்கள் ₹500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. . விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங் களுக்கான காலியிடங்கள், தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் பிற விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப் பட்டுள்ளன. முழுமையான அறிவிப்பை பெற https://www.rrbapply.gov.in/இணையதளத்தைப் பார்வை யிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூலை 29, 2026 ஆகும்.

விளையாட்டு வீரரா?

விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவராக நீங்கள் இருந்தால் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு வந்துள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள வருமான வரித்துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் Stenographer Grade-II, Tax Assistant மற்றும் Multi Tasking Staff (MTS) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. Stenographer Grade-II, Tax Assistant, Multi Tasking Staff (MTS)பணியிடங்களுக்கு 18 வயது முதல் 27 வயதிற்க்குள் இருக்க வேண்டும். Stenographer Grade-III மற்றும் Tax Assistant பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Multi Tasking Staff (MTS) பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தகுதி பெற்றிருக்க வேண்டும். எந்தெந்த விளையாட்டுப் பிரிவுகளுக்கு காலியிடங்கள் உள்ளன என்பதும், விண்ணப்பிக்கும் முறையும் https://www.incometaxindia.gov.inஎன்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூலை 31, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.