முந்தய பக்கம்

வங்கிகளிலுள்ள காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

10 Oct 2026, 11:44 pm
வங்கிகளிலுள்ள காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

வங்கிகளிலுள்ள காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

கோவை, அக்.10-எஸ்பிஐ வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஸ்டேட் வங்கி ஊழியர் அசோசியேசன் வலியுறுத்தியுள்ளது.ஸ்டேட் வங்கி ஊழியர் அசோசியேசன் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம், கோவை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சனியன்றுநடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பாபு, பொதுச்செயலாளர் குமார், மாநிலச்செயலாளர் மதிவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ்பிஐ வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்தியபொதுச்செயலாளர் சாஜி வர்கீஸ் சிறப்புரையாற்றினார். வங்கி ஊழியர் சம்மேளன மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஸ்வரன் வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத்தில், எஸ்பிஐ வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், உடனடியாக புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். வங்கியில் அனைத்து ஊழியர்களுக்கும் பொதுவான மற்றும் பாகுபாடற்ற மாறுதல் கொள்கையை முழுமையாகஅமல்படுத்த வேண்டும். வங்கிகளில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஊதிய முறையை முறைப்படுத்தி, உரிய பலன்களை வழங்க வேண்டும். வங்கிஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram