முந்தய பக்கம்

எஸ்பிஐ வங்கியின் கட்டண பணப்பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்தது

15 Feb 2026, 3:03 pm
எஸ்பிஐ வங்கியின் கட்டண பணப்பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்தது
<p><strong>எஸ்பிஐ வங்கியின் கட்டண பணப்பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்தது</strong></p> <p>நாட்டின் முதன்மையான பொதுத் &nbsp;துறை வங்கியான பாரத ஸ்டேட் &nbsp;வங்கி (எஸ்பிஐ), தனது &ldquo;ஐஎம்பிஎஸ் (IMPS - Immediate Pay ment Service)&rdquo; என்ற உடனடியாகப் &nbsp;பணம் அனுப்பும் மின்னணு முறை (ஆன் லைன்) &nbsp;பணப்பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணங்களை ஞாயிறன்று அமலுக்கு கொண்டு வந்தது. &nbsp;இதுவரை யோனோ (YONO) ஆப், இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி &nbsp;மூலம் மேற்கொள்ளப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் முழுமையாக இலவச மாக இருந்தன. ஆனால் புதிய விதி முறைகளின்படி, ரூ. 25,000 வரை கட்டணம் &nbsp;இல்லை என்றும், ரூ. 25,001 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் அனுப்புவதற்கு 2 ரூபாயும், ரூ. 1,00,001 முதல் ரூ. 2 லட்சம் &nbsp;வரை 6 ரூபாயும், ரூ. 2,00,001 முதல் ரூ. 5 &nbsp;லட்சம் வரை 10 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது. &nbsp;ஆனால் வங்கியின் கிளைகளுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் பரிவர்த்த னைக்கு ஐஎம்பிஎஸ் கட்டணங்களில் எந்த &nbsp;மாற்றமும் இல்லை; அவை பழைய நடை முறைப்படியே தொடரும். ஆன்லைன் முறைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப் &nbsp;பட உள்ளது. விலக்கு - விளக்கம் பாதுகாப்புப் படைச் சம்பளக் கணக்கு, ஒன்றிய அரசு சம்பளக் கணக்கு மற்றும் ரயில்வே சம்பளக் கணக்கு போன்ற குறிப்பிட்ட வகை சம்பளக் கண க்கு வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளை (ரூ. 25,000-க்குள்) ஊக்குவிக்கவும், பெரிய அளவி லான பரிவர்த்தனைகளுக்கான செயல் &nbsp;பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஷில்லாங்</p>
Share
FacebookXWhatsAppTelegram