சாயல்குடியில் விவசாயிகள் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
31 Oct 2026, 11:26 pm
<p><strong>சாயல்குடியில் விவசாயிகள் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகணன் துவக்க உரையாற்றினார். தாலுகா செயலாளர் எஸ்.சிவன்பெருமாள், தாலுகா தலைவர் வி.ஜி.வி.செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் டி.நவநீதகிருஷ்ணன், பி.கணேசன், சிபிஎம் தாலுகா செயலாளர் தங்கச்சாமி, அகில இந்திய விவசாயிகள் மகா சபை நிர்வாகிகள் வி.அந்தோணி, செல்வராஜ், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றியனர். அகில இந்திய விவசாயிகள் மகா சபை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.முருகபூபதி நிறைவுரையாற்றினார்.</p>
