முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

16 Jun 2026, 8:41 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

எழுத்தாளர் அசோக் குமார் பாண்டே

சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் 10 முறை கருணை மனுக்களைக் கோரினார். ஆனால் பகத் சிங் போன்ற புரட்சியாளர்கள் சமரசம் செய்ய மறுத்துவிட்டனர். நாம் இத்தனை காலமாக எதைச் சொல்லிக் கொண்டிருந்தோமோ, அதையேதான் நீதிமன்றத்திலும் சாவர்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவர்க்கர் கூறியுள்ளார். ஆனால் இதையும் பாஜக ஏற்காது.

உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் கபில் சிபல்

ஆர்எஸ்எஸ் ஒரு கலாச்சார அமைப்பு என்று மோகன் பகவத் கூறுகிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் 5 நட்சத்திர கலாச்சாரத்திற்குப் பழகிவிட்டார்கள். அலுவலகங்கள் கூட 5 நட்சத்திர தோற்றத்தைக் கொண்டுள்ளன. கார்களின் அணிவகுப்பு, துணைவேந்தர்கள், சிறப்புப் பணி அதிகாரிகள், ஆளுநர்கள், அமைச்சர்கள், கல்விப் பாடத்திட்டம் இவ்வளவு இருந்தும் நீங்கள் ஒரு கலாச்சார அமைப்பா?

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மீது ஆர்எஸ்எஸ் தொண்டர் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் கண்டனத்துக்குரியது. இந்தச் சூழலில் “தேசியவாதம்” என்பது சரியாக எங்கே வருகிறது?

நாகா மாணவர்கள் முன்னணி

பிரதமர் மோடி தனக்கென்று விமானம் வைத்திருப்பது அவரது ஆடம்பரம் ஒரு காரணம் என்றாலும், அவருக்கு தனது கார்ப்பரேட் கூட்டாளியான ஏர் இந்தியா மீது நம்பிக்கை இல்லாததும் மற்றொரு காரணமாக உள்ளது. தினமும் ஏர் இந்தியா விமானங்கள் பயத்துடனே தான் பறந்து வருகின்றன. இதனால் தான் நன்கொடையை பெற்றுவிட்டு விமானத்தில் பறக்க மோடி அஞ்சுகிறார்.

Share
FacebookXWhatsAppTelegram