தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் 10 முறை கருணை மனுக்களை அளித்தது உண்மைதான்! நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட கொள்ளுப்பேரன்

16 Jun 2026, 8:53 pm
சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் 10 முறை கருணை மனுக்களை அளித்தது உண்மைதான்! நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட கொள்ளுப்பேரன்

சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் 10 முறை கருணை மனுக்களை அளித்தது உண்மைதான்! நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட கொள்ளுப்பேரன்

கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தான் மற்றும் தனது நண் பர்கள் சேர்ந்து ஒரு முஸ்லிம் மனி தரை அடித்ததாகவும், அதில் தனக்கு மகிழ்ச்சி கிடைத்ததாகவும் சாவர்க்கர் ஒரு புத்தகத்தில் எழுதி யுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு எதிராக, சாவர்க்கரின் கொள்ளுப் பேரனான சத்யகி சாவர்க்கர், ராகுல் காந்தி மீது அவ தூறு வழக்கு தொடர்ந்தார். இது நஷ்ட ஈடு வழக்காகும். இந்த வழக்கின் விசாரணை மகாராஷ்டி ரா மாநிலம் புனேவில் உள்ள எம்.பி.,/எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரு கிறது.

இந்நிலையில், திங்களன்று சிறப்பு நீதிபதி அமோல் ஷிண்டே அமர்வில் ராகுல் காந்தியின் அவ தூறு வழக்கு மீண்டும் விசாரணை க்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியின் வழக்கறிஞர் மிலிந்த் பவார், சத்யகி சாவர்க்கரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

வழக்கறிஞர் மிலிந்த் பவார் கேட்ட கேள்விகளுக்கு சாவர்க்க ரின் பேரன் அளித்த பதிலில், “சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் தனது தண்டனையைக் குறைக்கக் கோரி 10 முறை கருணை மனுக்க ளை தாக்கல் செய்தது உண்மை தான். சாவர்க்கருக்கு தண்டனை விதிக்கப்பட்ட முதல் மாதத்திற்குள் ளேயே அவர் தனது முதல் கருணை மனுவை தாக்கல் செய்து விட்டார்.

ஆனால் அதே காலகட்டத் தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான ராஜகுரு, படுகேஷ்வர் தத், அஷ்பாகுல்லா கான் ஆகி யோர் பிரிட்டிஷ் அரசிடம் எந்த வொரு கருணை மனுவும் தாக்கல் செய்யவில்லை. பகத் சிங்கும், படுகேஷ்வர் தத்தும் இறுதிவரை தங்களது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நின்றார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியில் கருணை மனு தாக்கல் செய்வது கைதிகளின் தனிப்பட்ட விருப்பமே தவிர, யாரும் யாரையும் கட்டாயப்படுத்த வில்லை. சாவர்க்கர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, ‘கதர்’ என்ற இதழில் அவர் ‘வீர சாவர்க்கர்’ என்றுதான் அழைக்கப்பட்டார் சிறையில் இருந்து மன்னிப்புக் கேட்டதால் அந்தப் பட்டம் வரவில்லை” என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.