முந்தய பக்கம்

முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிய சவுதி

11 Apr 2026, 5:30 am
முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிய சவுதி

முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிய சவுதி

இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரே லின் தொடர் அடாவடியால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்ற மான சூழலே நிலவி வருகிறது. இடைக்கால போர் நிறுத்த ஒப் பந்தம் அறிவித்தாலும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், இதனை கண்டித்து திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரி ணையை மூடுவதாக (சில கட்டுப் பாடு மற்றும் கண்காணிப்புகளு டன்) ஈரான் அறிவித்துள்ளது. இந்நிலையில், கிழக்கு வளை குடா கடற்கரையில் உள்ள ஒரு முக்கியமான எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையமான சாட்ரோப்-பை சவூதி அரேபியா மூடியுள்ளதாக பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் வெள்ளி யன்று தெரிவித்துள்ளது. இது உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும். எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது பலமுறை தாக்கு தல்கள் நடத்தப்பட்டதாக சவூதி எரிசக்தி அமைச்சகம் வியாழ னன்று அறிவித்திருந்தது. இந்த தாக்குதலில் டோட்டல் எனர்ஜிஸ் மற்றும் சவூதி அரசின் அராம்கோ குழுமத்தின் கூட்டு நிறுவனமான சாட்ரோப் சுத்திகரிப்பு நிலையமும் அடங்கும் என செய்திகள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram