சாத்தூர் வைப்பாற்றில் முட்புதர்கள் அகற்றும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
5 Jul 2026, 9:26 pm
<p><strong>சாத்தூர் வைப்பாற்றில் முட்புதர்கள் அகற்றும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்</strong></p><p>விருதுநகர், ஜூலை 5- சாத்தூர் நகரின் வழியாக பாயும் வைப்பாற்றில் வளர்ந் துள்ள சீமைக் கருவேல மரங் கள் மற்றும் முட்புதர்களை அகற்றி, ஆற்றங்கரைகளில் மரக்கன்றுகள் நடும் பணி யை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரைராஜ் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றும் நிசபா நதி, தேவியாறு, நகரி யாறு, சீவலப்பேரியாறு மற் றும் காயல்குடியாறு ஆகிய சிற்றாறுகள் ஒன்றிணைந்து வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் வைப்பாறாக உரு வாகின்றன. அங்கிருந்து விருதுநகர் மற்றும் தூத்துக் குடி மாவட்டங்கள் வழியாக சுமார் 80 கிலோமீட்டர் பய ணித்து வங்கக் கடலில் கலக் கிறது. வைப்பாறு, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு முக்கிய நீராதாரமாக விள ங்கி வருகிறது. தற்போது சாத்தூர் மற் றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வழியாக செல்லும் சுமார் 2.5 கிலோமீட்டர் நீள முள்ள வைப்பாற்றின் கரை கள் மற்றும் ஆற்றுப் பகுதி களில், நீரோட்டத்துக்கு இடையூறாக சீமைக் கரு வேல மரங்கள் மற்றும் புதர் கள் அடர்த்தியாக வளர்ந் துள்ளன. மேலும், பொதுமக் கள் கொட்டும் திடக்கழிவு களால் ஆற்றின் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந் துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வைப்பாற்றை தூய்மைப்படுத்துதல், சீமைக் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்களை அக ற்றுதல், ஆற்றங்கரைகளை சீரமைத்தல் மற்றும் மரக்கன் றுகள் நடுதல் ஆகிய பணி களை சமூக நல நோக்கத்து டன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள் ளது. இந்தப் பணிகளின் மூலம் வைப்பாறு தூய்மையான, இயற்கை வளம் மிக்க, சுற் றுச்சூழலுக்கு உகந்த ஆறாக மாற்றப்படும். மேலும், நீரோட்டம் மேம்பட்டு பொது மக்கள் மற்றும் விவசாயி களுக்கு பெரும் பயன் கிடைக்கும் என்று ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கனகராஜ், வைப்பாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மலர் விழி, சாத்தூர் நகர்மன்றத் தலைவர் குருசாமி, தன் னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
