தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

100 நாள் வேலை வழங்கக் கோரிக்கை சாத்தூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

8 Jun 2026, 9:45 pm
100 நாள் வேலை வழங்கக் கோரிக்கை சாத்தூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை
<p><strong>100 நாள் வேலை வழங்கக் கோரிக்கை சாத்தூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை</strong></p><p>சாத்தூர், ஜூன் 8- சாத்தூர் ஒன்றியம் சிந்து வம்பட்டி ஊராட்சிக்கு உட் பட்ட நாருகாபுரம் கிரா மத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை சீராக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் சாத்தூர் ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். சிந்துவம்பட்டி ஊரா ட்சிக்கு உட்பட்ட நாருகா புரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழி லாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்பட வில்லை என்றும், வழங்கப் பட்ட பணிகளுக்கான ஊதிய மும் முறையாக வழங்கப்பட வில்லை என்றும் தொழிலா ளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், முத்தார்பட்டி பகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாரபட்சமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதாக கூறி அதற்கும் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் பி. பாலசுப்பு தலைமை வகித் தார். ஒன்றிய செயலாளர் எஸ்.மனோஜ்குமார் போரா ட்டத்தை தொடங்கி வைத் தார். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முத்துக்குமார் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.சுந்தரபாண்டியன் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் ஒன்றிய பொருளாளர் முனியராஜ், ராமச்சந்திரன், பாக்கிய லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. மனுவை பெற்ற அதி காரிகள், ஜூலை 1 முதல் தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், பாரபட்சமான செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து உரிய மாற் றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.