முந்தய பக்கம்

சாத்தூர் அருகே பிரதானக் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது

29 May 2026, 10:08 pm
சாத்தூர் அருகே பிரதானக் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது
<p><strong>சாத்தூர் அருகே பிரதானக் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது</strong></p><p>சாத்தூர், மே.,29- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி விலக்கில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரைகளில் ஏராளமான கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளன. அதிலிருந்து பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் சாத்தூர் ஒன்றியப் பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமங்க ளுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தாமிர பரணி குடிநீர் வழங்கப்படு கிறது. இந்தநிலையில் பெரிய ஓடைப்பட்டி விலக்கு அருகே உள்ள பிரதான குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஏராள மான குடிநீர் வீணாக வெளியே சென்றது. இதன் காரணமாக பெரிய ஓடைப் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வா கமானது, உடனடியாக சேதமடைந்த குடிநீர் குழா யை சீர்படுத்தி மீண்டும் குடிநீர் விநோயகத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram