நகை திருடியவர் கைது
30 Sept 2026, 11:42 pm
<p><strong>நகை திருடியவர் கைது</strong></p><p>சாத்தூர், செப்.30-சாத்தூரைச் சேர்ந்தவர் மதன்(42). பிரதானச் சாலையில் நகைக் கடை வைத்துள்ளார். கடந்த 26ம் தேதி இவரதுகடைக்கு பர்தா அணிந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நகை வாங்க வந்துள்ளார்.கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் 5 பவுன் நகையை கண் இமைக்கும் நேரத்தில் திருடி சென்றது குறித்து மதன் சாத்தூர் நகர்காவல்நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரைச் சேர்ந்த வினோத் என்பவரது மனைவி பிரியங்கா எனத் தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.</p>
