சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!
13 Apr 2026, 2:33 pm

சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பயங்கர வெடி ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் 60 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து ஏராளமான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் சிக்கியிருப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால், அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார் (வயது 42), செல்வம் (வயது 33), ரமேஷ் (வயது 42) ஆகிய மூன்று தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் உரிமம் கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.