முந்தய பக்கம்

கூடுதல் தேர்வுக் கட்டணம் வசூல்: மாணவர்கள் சாலை மறியல்

25 May 2026, 10:43 pm
கூடுதல் தேர்வுக் கட்டணம் வசூல்: மாணவர்கள் சாலை மறியல்
<p><strong>கூடுதல் தேர்வுக் கட்டணம் வசூல்: மாணவர்கள் சாலை மறியல்</strong></p><p> சாத்தூர், மே 25- சாத்தூர் அருகே உள்ளது சல்வார்பட்டி. இங்கு ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மீண்டும் அதே பாடத்தை எழுதிட அரசு விதித்துள்ள தேர்வு கட்டணத்தை விட கூடுதலாக பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் முறையீடு செய்த னர். இருந்தபோதும், கூடுதல் தேர்வு கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை. இதனால் வெகுண்டெழுந்த மாணவ, மாணவிகள், கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் சாத்தூர்-தாயில்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாண வர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட் டத்தை கைவிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram