கோவையின் புதிய அடையாளமாக மாறும் சாடிவயல் கும்கி முகாம்!
6 Mar 2026, 3:17 pm
<p><strong>கோவையின் புதிய அடையாளமாக மாறும் சாடிவயல் கும்கி முகாம்!</strong></p>
<p>கோவை, மார்ச் 6- மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்ட வனப்பகுதிகள், இயற்கை எழில் கொஞ்சும் அதே வேளை யில், யானை - மனித மோதல் கள் அதிகம் நிகழும் பதற்றமான மண்டலமாகவும் இருந்து வரு கின்றன. குறிப்பாக தொண்டா முத்தூர், ஆலந்துறை, மதுக்கரை, தடாகம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் புகும் யானைக ளால் பயிர் சேதங்களும், உயிரி ழப்புகளும் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், அவசர காலங்களில் அவற்றை பிடிக்கவும் முதுமலை அல்லது டாப் சிலிப் முகாம்களில் இருந்து கும்கி யானைகளை வர வழைப்பதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வாக, கோவை சாடிவயல் பகுதியில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளு டன் கூடிய புதிய யானைகள் முகாம் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள் ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முகாமில், யானைகளின் பராமரிப்பிற்காகப் பல்வேறு வசதிகள் செய்யப்பட் டுள்ளன. யானைகள் பாதுகாப்புக் கென, 18 புதிய யானை ஷெட்டுகள், 2 கரோல்கள் (பயிற்சி கூடம்) மற் றும் யானைகள் குளிப்பதற்கென பிரத்யேகமாக 5 ‘ஷவர்’ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகா மின் பாதுகாப்பிற்காக 2 கி.மீ தொலைவிற்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள் மற்றும் முகாமை சுற்றி ஆழமான அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 3 சிறிய தண்ணீர் குட்டைகள் உரு வாக்கப்பட்டுள்ளன. யானைப் பாகன் கள் தங்குவதற்கு 8 நவீன விடுதி கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த டிச.30 ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இந்த முகா மிற்கு, முதற்கட்டமாக டாப் சிலிப் முகாமில் இருந்து ’முத்து’ மற்றும் ’காவேரி’ ஆகிய இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள் ளன. மேலும், திருச்சி மற்றும் டாப் சிலிப் பகுதிகளிலிருந்து கூடுதல் கும்கி யானைகளை வரவழைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இனி கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுந்தால், சில மணி நேரங்களிலேயே கும்கி யானை களின் உதவியுடன் அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட முடியும். கோவை குற்றாலம் ஒரு முக் கிய சுற்றுலாத் தலமாக விளங்கு வதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த யானைகள் முகா மையும் நேரில் பார்வையிட வனத் துறை அனுமதி வழங்க உள்ளது. இது பொதுமக்களிடையே யானை கள் பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதுடன், கோவை யின் சுற்றுலா மதிப்பையும் உயர்த் தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட கும் கியை பயன்படுத்துவது என்பது ஒருபுறம் இருந்தாலும், மனித விலங்கு மோதல் என்பதை தடுக்க அறிவியல் பூர்வமான ஆய்வை மேற்கொண்டு அதற்கேற்ப நடவ டிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு என்கின்றனர் சூழலியலாளர் கள். -கவி</p>
