தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்

yesterday
குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 22- குறைந்தபட்ச ஓய்வூதி யம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சத்துணவு, அங் கன்வாடி ஓய்வூதியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு அரசு வழங் கும் குறைந்தபட்ச ஓய்வூதி யம் ரூ.7850 மற்றும் அகவி லைப்படி வழங்க வேண்டும். இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்து ணவு, அங்கன்வாடி ஓய்வூ தியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.என்.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபால், மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.நாயகம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.லதா, அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் கே.பழனிசாமி நிறைவுரையாற்றி னார். முடிவில், மாவட்டப் பொருளாளர் எஸ். சாரதாமணி நன்றி கூறினார்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம், சங்கத்தின் மாவட்டத் தலைவர் மல்லிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் சி.காவேரி, துணைத்தலைவர் சி.அங்கம்மாள், பொரு ளாளர் சி.கருணாநிதி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

திருப்பூர்

இதேபோன்று, திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.