முந்தய பக்கம்

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு

3 Jun 2026, 11:05 pm
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு
<p><strong>சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு</strong></p><p>சென்னை,ஜூன் 3- தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதி யர் சங்கத்தின் சார்பில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரியை புதனன்று (ஜூன் 3) சந்தித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது. சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 7850 ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப் படி,பண்டிகை பரிசுத்தொகை, பண்டிகை முன்பணம், இலவச மருத்துவக் காப்பீடு குடும்பநல நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு வழங்கப்பட் டது. 13.2.26 தேதியிட்ட அரசாணை யின் படி உயர்த்தப்பட்ட புதிய பென்ஷன் ரூ. 3400 , 3000 த்தை உடனே வழங்கிடவும், உரிய நிலுவைத் தொகை வழங்கிடவும் வலியுறுத்தப் பட்டது. அவசியம் நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.மீண்டும் மாநில நிர்வாகிகள் சந்திக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அமைச்சரை பொதுச்செயலாளர் பி.இராமமூர்த்தி, மாநில துணைத் தலைவர் பி. சித்ரசெல்வி சந்தித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram