தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

24 Apr 2026, 1:16 pm
சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூராமாக அடித்துப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் காவல் ஆய்வாளர் எஸ்.ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பி. ரகு கணேஷ் மற்றும் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் காவவர்கள் எஸ். முருகன் மற்றும் ஏ. சாமிதுரை, மற்றும் காவலர்கள் எம். முத்துராஜ், எஸ். செல்லதுரை, எக்ஸ். தாமஸ் பிரான்சிஸ், எஸ். வேலுமுத்து ஆகிய 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு காவல்துறை அதிகாரி கள்மொத்தமாக ரூ. 1.0 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ முறையீடு செய்துள்ளது.

இதை தொடர்ந்து, குற்றவாளிகள் 9 பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.