முந்தய பக்கம்

​​​​​​​சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களின் மேல்முறையீடு விசாரணை தொடங்கியது!

21 Jul 2026, 9:58 pm
​​​​​​​சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களின் மேல்முறையீடு விசாரணை தொடங்கியது!
<p><strong>​​​​​​​சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களின் மேல்முறையீடு விசாரணை தொடங்கியது!</strong></p><p>மதுரை, ஜூலை 21 - 2020-இல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர். இக்கொடூர படுகொலை வழக்கில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 காவலர்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இத்தண்டனையை உறுதிப்படுத்த சிபிஐ-யும், எதிராக 9 போலீசாரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வில் இவ்வழக்கு விசார ணைக்கு வந்தது. சிறையிலிருந்த 9 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிஐ வழக்க றிஞர், குற்றத்தை மறைக்க காவல்து றையினர் முயன்றதைச் சுட்டிக்காட்டி வாதாடினார். இதையடுத்து, வழக்கு விசார ணையை அடுத்த நாளுக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இனி தினமும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram