சாத்தையார் அணை தண்ணீரின்றி வறண்டது செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
13 Jul 2026, 9:47 pm
<p><strong>சாத்தையார் அணை தண்ணீரின்றி வறண்டது செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்</strong></p><p>மதுரை, ஜூலை 13- மதுரை மாவட்டம் பாலமேடு அருகே யுள்ள சாத்தையார் அணை தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால், தேங்கியுள்ள நீரில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை தெரி வித்துள்ளனர். மதுரை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான சாத்தையார் அணையில் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் தேங்கி உள்ளது. அணையில் 10 அடிக்கும் மேல் மணல் தேங்கியுள்ளதால், அதை தூர்வாரி ஆழப்படுத்தி நீரை நிரந்த ரமாக சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேங்கியுள்ள நீரில் மீன்கள் செத்து மிதப்பதால் குடிநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதே நீரை அருந்தும் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அணையில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்றி, குடிநீர் பாது காப்பு மற்றும் அணை பராமரிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
