தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டநீதியா? சாஸ்திர நீதியா?

22 Sept 2026, 9:51 pm
சட்டநீதியா? சாஸ்திர நீதியா?

சட்டநீதியா? சாஸ்திர நீதியா?

தஞ்சை திருமலை சமுத்திரத்தில் இயங்கி வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான 31.37 ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்தது. இது தொடர்பான வழக்கு 1985 முதல் 40 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்துள்ளது. தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிசூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த ஆக்கிரமிப்பு இடத்தை பல்கலைக்கழகத்திற்கே வழங்கிவிட்டு அவர்கள் தரும் வேறு நிலத்தைப் பெறுவது குறித்து ஏன் பரிசீலிக்கக்கூடாது என்று ‘பரிவோடு’ பரிந்துரைசெய்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘கருத்து’ தெரிவித்துள்ளனர்.அரசு நிலத்தைகல்வி நிறுவனத்தின் பெயரால் ஆக்கிரமிக்கலாம் என்ற சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் கல்விநிறுவனங்கள் அரசுப் புறம்போக்கு நிலங்களையும், நீர்நிலைகளையும் வளைத்துப்போட்டு ஆக்கிரமித்துள்ளன. அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த பரிந்துரை உவப்பாக இருக்கும்.

2026 ஜனவரி 9 அன்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தசென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 31.37 ஏக்கர் அரசு நிலத்தை மீட்கவேண்டுமென்றும் தேவையானால் காவல்துறைஉதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நான்கு வாரங்களுக்குள் திறந்தவெளி சிறைச்சாலைக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்க வேண்டுமென்றும் கெடு விதித்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மாற்று இடத்தை பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தற்போது மேகமலை பகுதியில் காலம் காலமாககுடியிருக்கும் மக்களை அகற்றுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் துணை ராணுவப் படையையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுமாறு கூறிய போது, இத்தகைய கரிசனம்ஏன் காணாமல் போய்விட்டது என்பது புரியவில்லை.

சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகத்தின் அரசியல் செல்வாக்கு நாடறிந்த ஒன்று. தமிழக அரசு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்கக்கூடாது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க வேண்டும்.

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டுமென்ற ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்துத் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதலைமையிலான அமர்வு மனச்சாட்சி அல்லது மத நம்பிக்கை காரணமாக ஒருவர் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடமறுத்தால் அவருக்கு குற்றவியல் தண்டனை என்பது பொருத்தமல்ல என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தராசு முள் போல நீதிமன்றத் தீர்ப்புகள் அப்படியும் இப்படியுமாக அசைந்தாலும் நியாயத்தின் பக்கமே நிலைகொள்ள வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.