தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்தார்பட்டேல் சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

27 Sept 2026, 3:00 am
சர்தார்பட்டேல் சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சர்தார்பட்டேல் சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சென்னை, செப்.26 -சர்தார் பட்டேல் சாலையில், சிறுவர் பூங்கா முதல் - அண்ணா பல்கலைக் கழகம் வரை நடைபெறும் விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிண்டி, சர்தார் படேல் சாலை 60 அடி அகலம் உடையது. இசிஆர், ஓஎம்ஆர் சாலை கள், அடையாறு பகுதியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் சைதாப்பேட்டை யில் இருந்து அடையாறு, ஓஎம்ஆர். நோக்கி செல்லும் வாகனங்கள், சர்தார் படேல் சாலை வழியாக செல்கின்றன.

இதில், கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து, மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் இந்த சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஐஐடி நுழைவு வாயில் முதல் கவர்னர் மாளிகை நுழைவு வாயில் வரை, 1.6 கி.மீ. தூரத்திற்கு சாலையின் அகலத்தை 100 அடியாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக 48 கோடி ரூபாய் ஒதுக்கி கடந்தாண்டு பணி தொடங்கப்பட்டது,

ஆளுநர் மாளிகை - புற்று

நோய் மருத்துவமனை வரை துண்டுத்துண்டாக சாலை விரி வாக்கம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியப்பகுதி களில் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வரு கிறது. சிறுவர் பூங்கா முதல் - அண்ணா பல்கலைக் கழகம் வரை தற்போது விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்தப் பணி மிக தொய்வாக உள்ளது.

தற்போது கோட்டூர்புரத்தில் இருந்து வரும் வாகனங்கள் புற்றுநோய் மருத்துவமனை சிக்னலில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இத னால் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி, மத்திய கைலாஷ் சிக்னல் சென்று திரும்பி வரு கின்றன. இதனால் ஐஐடி - புற்றுநோய் மருத்துவமனை-சிறுவர் பூங்கா- காந்தி மண்ட பம் மார்க்கத்தில் வாகன நெரி சல் அதிகரிக்கிறது.

எனவே, சிறுவர் பூங்கா முதல் - அண்ணா பல்கலைக் கழகம் மார்க்கத்தில் நடை பெறும் பணியை துரிதப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.