தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீண்டகால சம்பள பாக்கியை கேட்டு சரவண பவன் ஊழியர்கள் போராட்டம்

11 Jun 2026, 11:44 pm
நீண்டகால சம்பள பாக்கியை கேட்டு சரவண பவன் ஊழியர்கள் போராட்டம்
<p><strong>நீண்டகால சம்பள பாக்கியை கேட்டு சரவண பவன் ஊழியர்கள் போராட்டம்</strong></p><p>சென்னை, ஜூன் 11 - பல்லாண்டுகளாக சம்பள பாக்கியை கேட்டு வியாழனன்று (ஜூன் 11) சரவணபவன் உணவகம் முன்பு ஊழி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் சரவணபவன் ஓட்டல் கிளைகளை கொண்டுள்ளது. சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்தக்கடைகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு தொழி லாளர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர். இஎஸ்ஐ, பிஎப் போன்றவற்றிற்கு பணம் பிடித்தும் முறையாக கணக்கில் செலுத்தப்படவில்லை. பணியிலிருந்து விலகியவர்களுக்கு சட்டச்சலுகைகள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி வடபழனி சரவணபவன் உணவகம் அருகே 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஓட்டலில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றிய திருவையாறை சேர்ந்த பட்டாபிராமன் கூறுகையில், சம்பளம் நிலுவை, இஎஸ்ஐ, பிஎப் என 2 லட்சம் ரூபாய் வழங்காமல் உள்ளனர். தன்னை போன்றே 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். தினசரி 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், 12ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறி, 2 வருடமாக மாதம் 5ஆயிரம் ரூபாய்தான் தந்தனர். மிகை ஊதியத்திற்கும் ஊதியம் தரவில்லை என்று 13 வருடமாக பணியாற்றிய இந்திர குமார் குற்றம் சாட்டினார். 14 ஆண்டுகளாக பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த தர்மா கூறுகையில், 14வயதில் வேலைக்கு சேர்ந்தேன். முதல் 4 வருடத்திற்கு பிஎப் பணம் பிடித்தாலும், வயதை காரணம் காட்டி அந்த தொகையை கணக்கில் செலுத்தவில்லை. 21ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறிவிட்டு, 5ஆயி ரம் ரூபாய்தான் தந்தார்கள். 3 மாதத்திற்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டேன். ரூ.1.50 லட்சம் பாக்கி வைத்துள்ளனர் என்றார். அண்மையில் மறைந்த நேபாளத்தை சேர்ந்த ரபிலால் தப்பாவிற்கு நிர்வா கம் வழங்க வேண்டிய 1.10 லட்சம் ரூபாயை வழங்க கோரி அவரது மனைவி மீரா ரொபி லாலும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தையடுத்து சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார் உள்ளிட்டோருடன் நிர்வா கம் பேச்சுவார்த்தை நடத்தியது. நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பட்டியலை 10 நாட்களுக்குள் வழங்கினால் அவற்றை ஆய்வு செய்து ஊதிய பாக்கி உள்ளிட்டவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.