முந்தய பக்கம்

சங்கராபுரத்தில் பெண் மரணம்: அரசு மருத்துவமனை முன்பு மறியல்

11 Jun 2026, 11:37 pm
சங்கராபுரத்தில் பெண் மரணம்:  அரசு மருத்துவமனை முன்பு மறியல்
<p><strong>சங்கராபுரத்தில் பெண் மரணம்: அரசு மருத்துவமனை முன்பு மறியல்</strong></p><p>சங்கராபுரம், ஜூன் 11- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனை முன்பு, பெண் ஒரு வரின் மரணம் தொடர்பாக உறவினர்கள் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனர். பலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் நெஞ்சுவலி காரணமாகச் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், உடற்கூறு ஆய்வு செய்த பின்னரே சடலத்தை ஒப்படைக்க முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சடலத்தை உடனடியாக ஒப்படைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அமரர் ஊர்தி வாகனத்தைச் சிறைபிடித்து இரண்டாம் முறையாக மறியல் செய்ததால், பூட்டை - அரசம்பட்டு சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த சங்கராபுரம் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் மற்றும் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram