முந்தய பக்கம்

சங்கராபுரம் தாலுகா அலுவலகம்செல்லும் சாலையில் மண் குவியல்

28 Oct 2026, 11:14 pm
சங்கராபுரம் தாலுகா அலுவலகம்செல்லும் சாலையில் மண் குவியல்

சங்கராபுரம் தாலுகா அலுவலகம்செல்லும் சாலையில் மண் குவியல்

சங்கராபுரம், அக்.28-சங்கராபுரம் நகரப் பகுதியில் தாலுகா அலுவலகம் செல்லும் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில், பெய்த மழையில் அடித்து வரப்பட்ட மண் மற்றும் மணல்கள் ஆங்காங்கே திட்டு திட்டாக குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சாலையின் நடுவேயும், ஓரங்களிலும் மண் குவியலாக கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சாலை சரியாக தெரியாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.எனவே, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையில் கிடக்கும் மண், மணல் குவியல்களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram