தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சங்கராபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் வெறும் கையால் சாக்கடை சீர் செய்யும் அவலம்

5 Jul 2026, 1:43 am
சங்கராபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் வெறும் கையால் சாக்கடை சீர் செய்யும் அவலம்
<p><strong>சங்கராபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் வெறும் கையால் சாக்கடை சீர் செய்யும் அவலம்</strong></p><p>சங்கராபுரம், ஜூலை 4 – சங்கராபுரம் அரசு மருத்துவமனை முன்பாக ஏற்பட்ட சாக்கடை அடைப்பை, தூய்மைப் பணியாளர்கள் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் அகற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வார்டுகளைக் கொண்ட இப்பேரூ ராட்சியில் நிரந்தரம், ஒப்பந்தம் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான கையுறை, காலணி மற்றும் முகக்கவசம் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களை நிர்வாகம் வழங்காததே இந்த அவல நிலைக்குக் காரணமாகும். பொது சுகா தாரத்தை உறுதி செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் உயிரைப் பணயம் வைத்து, அரசு மருத்துவமனை போன்ற பொது இடத்திலேயே இத்தகைய பணிகள் நடைபெறுவது கண்டனத்திற்குரியது எனப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, தூய்மைப் பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இது போன்ற சூழல்கள் இனிமேல் ஏற்படாத வண்ணம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.