முந்தய பக்கம்

சங்கராபுரம் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

11 Jul 2026, 10:31 pm
சங்கராபுரம் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
<p><strong>சங்கராபுரம் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 11- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பொய்குணம் கிராமத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளின் பயிர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள், தற்போது உரிய வளர்ச்சியின்றி மஞ்சள் நிறமாக மாறி கருகும் நிலையில் உள்ளன. பயிர்களின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், முதலீடு செய்த பெரும் தொகையும், தங்களது உழைப்பும் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “எதிர்பாராத விதமாகப் பயிர்களைத் தாக்கியுள்ள இந்த மர்ம நோயால் பெரும் நட்டத்தைச் சந்தித்து வருகிறோம். எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனடியாகப் பொய்குணம் கிராமத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்ய வேண்டும். பயிர்களைத் தாக்கியுள்ள நோயின் காரணத்தைக் கண்டறிந்து, உரிய மருந்து மற்றும் பாதிப்புக்கு ஏற்ப அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram