முந்தய பக்கம்

சங்கராபுரம் விவசாயிகளுக்கு மானியத்தில் குறுவை தொகுப்பு

5 Jul 2026, 1:41 am
சங்கராபுரம் விவசாயிகளுக்கு  மானியத்தில் குறுவை தொகுப்பு
<p><strong>சங்கராபுரம் விவசாயிகளுக்கு மானியத்தில் குறுவை தொகுப்பு</strong> </p><p>சங்கராபுரம், ஜூலை 4- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வேளாண்மை துறை சார்பில், சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கான இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட இடுபொருட்கள் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ், நெல் விதைகள், உயிர் உரம், நுண்ணூட்ட உரம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் அடங்கிய தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த இடுபொருட்கள் அனைத்தும் 50% மானிய விலையில் வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வேளாண் உதவி அலுவலர் அப்பாஸ், வேளாண் அலுவலர்கள் மற்றும் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். குறுவை பருவ சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைக்கும் நோக்கிலும் இந்த மானிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram