சங்கரன்கோவிலில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா கவிதை நூல் வெளியீடு - மாணவர்களுக்கு பரிசளிப்பு
4 Oct 2026, 11:50 pm

சங்கரன்கோவிலில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா

கவிதை நூல் வெளியீடு - மாணவர்களுக்கு பரிசளிப்பு

தென்காசி,அக். 04-தமிழ் சிறுகதையின் தடங்கள் என்ற நூலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்குப் பாராட்டு விழா, கவிஞர் மு. ஈஸ்வரமூர்த்தி எழுதிய‘பெயரில் இருக்கிறாய்’ கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் சங்கரன்கோவில்கிளை சார்பில் அக்டோபர் 3 அன்று சங்கரன்கோவில் ஸ்ரீ கிருஷ்ணா ஹாலில் நடைபெற்றன.

மக்களிசையுடன் தொடங்கிய விழாவுக்கு, ஸ்ரீ வையாபுரி குழுமத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவர் வி.எஸ். சுப்பராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ந.பழனிச்செல்வம், சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.சு.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் நகரச் செயலாளர் ப.தண்டபாணி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் கி. ராஜாராம், மாவட்டக்குழு உறுப்பினர் ந.செந்தில்வேல், நகரச் செயற்குழு உறுப்பினர் ச. நாராயணன் ஆகியோர் பேசினர்.எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் மு.ஈஸ்வரமூர்த்தி எழுதிய ‘பெயரில் இருக்கிறாய்’ கவிதை நூலைவெளியிட்டு ஏற்புரையாற்றினார்.

புதியபார்வை இ.சிதம்பரம், சங்கத்தின் நகரப் பொருளாளர் எழுத்தாளர் அகிலாண்டபாரதி, நகரச் செயற்குழு உறுப்பினர் கபிலன் சசிகுமார், இலக்கியச்சோலை செயலாளர் மா.சங்கரேஸ்வரி, நகரத் துணைச் செயலாளர் மு. சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர்.விழாவில், கலை நன்மணி விருது பெற்ற நாடகக் கலைஞர் மு.சு.மதியழகன், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மு. தங்கராஜ், வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்விஆசிரியர் து. கவிதா, கரிவலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.பரமேஸ்வரி ஆகியோர் பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர்.

தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.பக்ருதீன் அலி அகம்மது, அ.ஆ. மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் முனைவர் வே.சங்கர்ராம், அரண் வாசகர் வட்ட சு.இராசகோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத் துணைச் செயலாளர் மு. ஈஸ்வரமூர்த்தி ஏற்புரையாற்றினார்.நகரத் தலைவர் மு.செல்வின் நன்றி கூறினார். விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.