“மாணவர்கள் போராட்டத்தைப் பற்றி பேச ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எந்த தகுதியும் இல்லை”
3 Aug 2026, 8:22 pm

“மாணவர்கள் போராட்டத்தைப் பற்றி பேச ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எந்த தகுதியும் இல்லை”

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் தேசவிரோதமானது. இந்தப் போராட்டத்தை வெறும் அரசியல் கோணத்திலோ அல்லது பாஜகவுக்கு எதிரானதாகவோ மட்டும் பார்க்கக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் அதுல் லிமே கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்ட

னம் குவிந்தன.

இந்நிலையில், அதுல் லிமேவின் கருத்திற்கு சிவசேனா (உத்தவ்) கட்சியின்மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”நாட்டில் நடைபெறும் எந்தவொருபோராட்டமும் எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாக இருக்க முடியும்? எந்தப் போராட்டமும்அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல. ஆர்எஸ்எஸ்ஸின் வரலாறே அவர்களின் சித்தாந்தம்

தான். வேறு எதுவும் இல்லை. அவர்கள்இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை.

அவர்கள் மூவர்ணக் கொடியை மதிப்பதில்லை. இந்தியாவின் சுதந்திரத்தை அவர்கள் மதிப்பதில்லை. கடந்த 52 ஆண்டுகளாக அவர்கள் தங்கள்அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியது கிடையாது. அவர்கள் ஒரு தனிப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைஉருவாக்க விரும்புகிறார்கள். அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக அவர்கள் 50 எம்.பி.,க்கள் கொண்ட குழுவை மோடி அரசுக்குள்உருவாக்கியுள்ளனர். இது எந்த பலனையும் தரப்போவதில்லை” என்று அவர் கூறினார்.