தூய்மைப்பணியாளர் நலவாரிய கூட்டம்
29 Jan 2026, 5:39 pm
<p><strong>தூய்மைப்பணியாளர் நலவாரிய கூட்டம் </strong></p>
<p>கடலூர், ஜன.29- தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூரில் நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஐயப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணை யாளர் முஜிபுர் ரகுமான், தாட்கோ மாவட்ட மேலாளர் அருள்முருகன், தூய்மை பணி யாளர் நலவாரிய உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 21 தூய்மை பணியாளர்களுக்கு 81 ஆயி ரம் கல்வி உதவி தொகையும், 150 நபர்க ளுக்கு அடையாள அட்டையும், 134 நபர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப் பட்டன.</p>
