முந்தய பக்கம்

சுகாதார ஆய்வாளரை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை

22 Feb 2026, 3:26 pm
சுகாதார ஆய்வாளரை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை
<p><strong>சுகாதார ஆய்வாளரை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை</strong></p> <p>நாமக்கல், பிப்.22- ராசிபுரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் தொழிலாளர்களை தரக் ்குறைவாக நடத்தியதை கண்டித் தும், காலை உணவின் தரம் குறித்தும் தூய்மைப் பணியாளர்கள் நக ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் 60 நிரந்தரப் பணியா ளர்கள், 103 தற்காலிகப் பணியா ளர்கள் என மொத்தம் 200-க்கும் மேற் பட்ட தூய்மைப்பணியாளர்கள், மேற் பார்வையாளர்கள் மற்றும் ஓட்டுநர் கள் பணியாற்றி வருகின்றனர். இவர் களுக்காக தமிழக அரசின் காலை &nbsp;உணவுத் திட்டம் நகராட்சியின் ஐந்து இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனியன்று காலை &nbsp;நகராட்சி அலுவலகத்தில் காலை &nbsp;உணவு அருந்த வந்த தொழிலா ளர்களை, அங்கிருந்த சுகாதார ஆய் வாளர் தரக்குறைவான வார்த்தைக ளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த 25-க்கும் &nbsp;மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து, நகராட்சி அலுவலகத் தின் முன் திரண்டு முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்க ளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். தகவலறிந்து வந்த நகர்மன்றத் தலைவர் ஆர். கவிதா சங்கர், நக ராட்சி ஆணையாளர் ஒய். நிவேதிதா மற்றும் சுகாதார அலுவலர் செல்வ ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடு பட்ட தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்ததை அடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram