தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போனஸ் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

2 Nov 2026, 11:55 pm
போனஸ் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

போனஸ் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.2-தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச போனஸாக ஒரு மாத சம்பளம் வழங்கக்கோரி, சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சிதுறை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாணை எண்: 2டி(62)இன்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.746 வழங்க வேண்டும். நகர விரிவாக்கத்திற்கேற்றார் போல் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். அனைவருக்கும் பிஎப், இஎஸ்ஐ மற்றும் மாத சம்பளப் பட்டியல் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச போனஸாக (8.33 சதவீதம்) ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள், மாவட்ட துணைச்செயலாளர் சி.கவிதா மற்றும் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வளர்மதி உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவை

இதேபோன்று, கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள்,

மருந்து தெளிப்பவர்கள் என சுமார் 400 தொழிலாளர்கள், தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நகராட்சி அலுவலக வாயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஒப்பந்ததாரருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்புப் போராட்டத்தை தொடருவோம்’ என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.