தூய்மைப் பணியாளர்களுக்கு வேலை கேட்டு காத்திருப்பு போராட்டம்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 57 ஏரிகளுக்கு மீன்பாசி குத்தகை ஏலம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல்</strong></p>
<p>ள்ளக்குறிச்சி, நவ.20 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 57 ஏரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை ஏலம் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி வட்டத்தில் முடியனூர், நாகலூர், குரூர், திம்மலை, வாழவந்தான்குப்பம், மாடூர், பெருவங்கூர், பிரிதிவிமங்கலம், ஏமப்பேர், சிறுவங்கூர் ஆகிய 10 ஏரிகளும்; உளுந்தூர்பேட்டை வட்டத்தில் வெள்ளையூர், ஆத்தூர்பெரியஏரி, அலங்கிரி, அரளி, ஆசனூர், காட்டுநெமிலி, ஏ.புத்தூர், குஞ்சரம், மேட்டத்தூர், பு.கிள்ளனூர், பூ.மலையனூர், பரிக்கல், பில்லூர், செம்பியன்மாதேவி, செங்குறிச்சி, டி.ஒரத்தூர், உடையானத்தம், உதுப்பூர், கொரட்டூர், மடப்பட்டு, பாலி, காட்டுஎடையார், களமருதூர் ஆகிய 24 ஏரிகளும்; திருக்கோவிலூர் வட்டத்தில் ஆவிகொளப்பாக்கம், எடையூர், எல்ராம்பட்டு, குலதீபமங்கலம், முதலூர், திருப்பாலப்பந்தல், தகடி, மாடம்பூண்டி ஆகிய 8 ஏரிகளும்; சங்கராபுரம் வட்டத்தில் மஞ்சப்புத்தூர், தண்டலை, பூட்டை ஆகிய 3 ஏரிகளும்; வாணாபுரம் வட்டத்தில் அரியலூர் உள்ளிட்ட 12 ஏரிகளும் என மொத்தம் 57 ஏரிகள் ஒப்பந்தப்புள்ளி மூலம் குத்தகைக்கு விடப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56A, தாட்கோ வளாகம், விழுப்புரம்-605 602 என்ற முகவரியிலும்,fishermenwelfarevpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அல்லது 04146-259329 என்ற தொலைபேசி எண்ணிலும் விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். சிபிஎம் முயற்சியால் ரயில்வே கிராசிங் ரோடு சீரமைப்பு கடலூர், நவ.20- நெல்லிக்குப்பம் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான நெல்லிக்குப்பம் - மேல்பாதி ஆலை ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே கேட் ரோடு கிராசிங் பல மாதங்களாக சரி செய்யாமல் இருந்தது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பஞ்சாட்சரம் தலைமையில் பகுதி குழு செய லாளர் ப.ஸ்டீபன் ராஜ், பகுதி குழு உறுப்பினர் ஆர்.வி.எஸ். தண்டபாணி, அரபாத் ஆகியோர் ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் ஒப்புதலோடு வியாழனன்று பாதையை சரி செய்யும் பணி நடைபெற்றது. சிபிஎம் முன்முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.</p>
