ஒப்புக்கொண்ட கூலி உயர்வை வழங்கக்கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் ஊர்வலம்
11 Nov 2025, 3:41 pm
<p><strong>ஒப்புக்கொண்ட கூலி உயர்வை வழங்கக்கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் ஊர்வலம்</strong></p>
<p>திருப்பூர், நவ.11- திருப்பூரில் பேச்சுவார்த்தையில் ஒப்புகொண்ட கூலி உயர்வு வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் (சிஐடியு) சங்கத்தினர் செவ்வா யன்று கோயில் வழி பேருந்து நிலை யத்தில் இருந்து தாராபுரம் சாலை யில் ஊர்வலமாக வந்து மாநகராட் சியை முற்றுகையிட முயற்சித்தனர். காவல்துறையினர் அவர்களை அழைத்து சென்று தனியார் மண்ட பத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்பூர் மாநகராட்சியில், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அவுட்சோர்சிங் ஒப்பந்த ஊழியர்க ளின் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை களுக்காக கடந்த அக்.9,10,11 தேதிக ளில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. இதில் சுமூகமான தீர்வு காண மேயர் மற்றும் துணை மேயர், சீனிவாசா குப்பை மேலாண்மை அவுட்சோர்சிங் நிறுவனத்தினரை வர வழைத்துப் பேசினர். இதில், இம்மாதத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.613, ஓட்டுநர்களுக்கு ரூ.867 தினசரி ஊதிய மாக வழங்கப்படும். மேலும் இம்மா தத்தில் இருந்து சம்பள ரசீது வழங்கப்படும். பி.எப். பிடித்தங் களை முறைப்படுத்த மண்டல வாரி யாக, தொழிலாளர்களை அழைத்து முகாம் நடத்துவது என இரு தரப்பி லும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வேலை நிறுத்தம் திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில், எஸ்.டபிள்யூ.எம்.எஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊதி யத்தைப் பல ஊழியர்களுக்கு குறைத்து வழங்கி உள்ளனர். குறிப்பாக 3 ஆம் மண்டலத்தில் வேலை செய்யும் புலம்பெயர் தொழி லாளர்களுக்கு ஊதியத்தை குறைத்து வழங்கியுள்ளனர். இதை கண்டித்து உடனடியாக ஒப்புக் கொண்ட கூலி உயர்வு வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் கோயில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் சாலையில் ஊர்வலமாக வந்து மாநக ராட்சியை முற்றுகையிட முயற்சித் தினர். அப்போது காவலர்கள் அவர் களை வலுக்கட்டாயமாக தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற னர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தி னர். இந்த பேச்சுவார்த்தையில் சீனி வாசா குப்பை மேலாண்மை நிர்வா கம், மூன்றாவது மண்டல உதவி ஆணையர், மாநகர் நல அலுவலர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். இதில் இன்னும் 48 மணி நேரத்தில் ஒப்புகொண்ட ஊதியம் வழங்குவது, 20 ஆம் தேதி ஊதிய ரசீது வழங்குவது, புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் இடத் திற்கு வாடகை குறித்து மாநகராட்சி நிர்வாகத்தில் பேசுவது என ஒப்புக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 205 பேர் விடுவிக்கப்பட் டனர்.</p>
