கல்பாக்கத்தில் போனஸ் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் அதிகாரிகள் உத்தரவால் தற்காலிக வாபஸ்
1 Dec 2025, 5:20 pm
<p><strong>கல்பாக்கத்தில் போனஸ் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் அதிகாரிகள் உத்தரவால் தற்காலிக வாபஸ்</strong></p>
<p>கல்பாக்கம், டிச.1- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் உள்ள அணுசக்தித் துறையின் நகரியத்தில் (டவுன்ஷிப்) சுமார் 110 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு களாக போனஸ் வழங்கப்படாமலும், ஓராண்டு காலமாக வருங்கால வைப்பு நிதி (PF) முறையாகப் பிடித்தம் செய்யப்படாமலும் இருந்துள்ளது. இந்நிலையில், நிலுவையில் உள்ள போனஸ் தொகையை வழங்கக் கோரியும், வருங்கால வைப்பு நிதியை முறையாகப் பிடித்தம் செய்ய வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் திங்கள்கிழமை (டிசம்பர் 01) கல்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்ஓ அலுவ லகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் துணைத் தலை வர் கே. பழனிச்சாமி தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சி. செல்வகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் பி.கே. ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவாக, ஜிஎஸ்ஓ அதிகாரிகள் திங்கள்கிழமை மாலைக்குள் போனஸ் தொகையை தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.</p>
