தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்மாநகர் எஸ்டேட் பகுதியில் சுகாதார சீர்கேடு கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பு

10 Jan 2026, 2:48 pm
சர்மாநகர் எஸ்டேட் பகுதியில் சுகாதார சீர்கேடு கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பு
<p><strong>சர்மாநகர் எஸ்டேட் பகுதியில் சுகாதார சீர்கேடு கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பு</strong></p> <p>சென்னை, ஜன. 10- &nbsp;சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எருக்கஞ்சேரி சாலை, சர்மா நகர் எஸ்டேட் பகுதி அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் வாழ முடியாத நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் வாழும் இப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாகி, கழிவுநீர் குளம் போல் தேங்கிக் கிடக்கிறது. &nbsp;இதனால் கொசுத் தொல்லை அதிகரித்து &nbsp;காய்ச்சல், சரும பாதிப்பு ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டு கின்றனர். &nbsp;&ldquo;ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதி என்ப தால் இப்படி நடந்துகொள்ளலாமா என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். குறிப்பாகப் புதுநகர், காந்தி நகர் மற்றும் பாரதியார் பேருந்து நிலையப் பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் மற்றும் முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு நிர்வாகம் காலம் தாழ்த்தினால் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.