முந்தய பக்கம்

பெண் காவலர்களுக்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரம்

4 Dec 2025, 3:52 pm
பெண் காவலர்களுக்கு சானிட்டரி  நாப்கின் விநியோகிக்கும் இயந்திரம்
<p><strong>பெண் காவலர்களுக்கு சானிட்டரி &nbsp;நாப்கின் விநியோகிக்கும் இயந்திரம்</strong></p> <p>சென்னை, டிச.4- சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு சானிட்டரி நாப்கின் விநி யோகிக்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. &nbsp;இதற்கான இயந்தி ரத்தை கூடுதல் காவல் ஆணையர் ராதிகா வியாழக்கிழமை (டிச.4) தொடங்கி வைத்தார். தமிழக காவல் துறையில் 26,589 பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர். சென்னையை பொறுத்த வரை 5,500-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பணி யில் உள்ளனர். &nbsp;45 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசாருக்கு இரவு பணி வழங்கப்படமாட்டாது என சென்னை காவல் ஆணையர் அருண் அண்மையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக பெண்கள் பணியாற்றும் இடங்களில் குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் அமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை யில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ஆயுதப்படை -1 மற்றும் - 2 வளாகங்கள், மோட்டார் வாகனப்பிரிவு, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு அலுவலகம் உள்பட 43 இடங்களில் குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப் பட்டுள்ளது. இதன் இயக்கத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ராதிகா புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் மூலம் சுமார் 5,900 பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பயனடைய உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram