தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘‘ஆட்சி மாற்றத்திற்கு” வித்திடும் என அஞ்சி நடுங்கும் சங்பரிவாரம்! - ச.வீரமணி

2 Nov 2026, 9:37 pm
‘‘ஆட்சி மாற்றத்திற்கு” வித்திடும் என அஞ்சி நடுங்கும் சங்பரிவாரம்! -  ச.வீரமணி

‘‘ஆட்சி மாற்றத்திற்கு” வித்திடும் என அஞ்சி நடுங்கும் சங்பரிவாரம்! - ச.வீரமணி

நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் நடுநிலையாக இருக்க வேண்டிய இந்தியத்தேர்தல் ஆணையம், பாஜக-விற்கு சார்பாகப் பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்துள்ள எதிர்ப்புகளைக் கண்டு அரசாங்கமும் ஆளும் கட்சியும் நிலைகுலைந்து போயுள்ளன. நீரில் மூழ்கும் ஒருவர் கையில் கிடைக்கும் வைக்கோல்துரும்பைப் பற்றிக்கொள்வதைப் போல, ஆளும் கட்சியும் அதற்கு ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சமூக ஊடகங்களும் இது ‘அரசாங்கத்தை மாற்றும் முயற்சி’ (regime change) என்று கூப்பாடு போடத் தொடங்கியுள்ளன.

இவர்களின் விரக்தி இப்போது வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிவிட்டது. இவர்களின் இந்த விரக்தியானது, போராட்டங்களுக்கு உத்வேகம் அளித்த சாராம்சத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகளில் இறங்க வைத்திருக்கின்றன. அரசமைப்புச் சட்ட நடைமுறைகளால் ஆளப்படும்ஒரு ஜனநாயகத்தில், ஆட்சியாளர்கள் புரிந்திடும் தவறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அதனைமாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைஎதிர்க்கட்சிகள் மேற்கொள்கின்றன. இவற்றின் நடவடிக்கைகள் ‘ஆட்சி மாற்றத்திற்கான’ பின்னணியை வழங்குகின்றன. நம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் இத்தகைய ஆட்சி மாற்றங்கள் வழக்கமானவைகளேயாகும்.

தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் செயல்முறையை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்காக நிகழ்த்தப்பட்ட பகிரங்கமான முறைகேடுகள் மற்றும் சட்டவிதிகளை மீறிய நிகழ்வுகளால் இந்தப் போராட்டங்கள் தூண்டப்பட்டுள்ளன. அரசுத் தரப்பின் இந்தச் செயலே, போராட்டம் தீவிரமாக நடைபெறுவதற்கானதூண்டுதல்களை உருவாக்குகிறது. இருப்பினும், நல்லவேளையாக, எதிர்க்கட்சிகள் மற்றும் ‘ஜென்-இசட்’ (GenZ)குழுக்கள் என ஏறக்குறைய அனைத்துப் போராட்டக்காரர்களும் பெரும்பாலும் அமைதியான வடிவங்களையே தேர்வு செய்துள்ளனர்.

அமைதிக்குக் குந்தகம் விளைவித்த ஏதேனும் ஒரு நிகழ்வு இருந்தால், அது பெரும்பாலும் பாதுகாப்புப் படையின் கட்டவிழ்த்துவிட்ட முன்னெப்போதும் இல்லாத வன்முறையின் விளைவாகவே அமைந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் குண்டர்களைப் போலவே செயல்பட்டுள்ளனர் என்றும், இளம்பெண் போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் வன்முறை நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டுவது மிகையாகாது. உண்மையில், அத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நிலுவையில் உள்ளன. பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து, பல்வேறு இந்துத்துவா குழுக்களைச் சேர்ந்த குண்டர்களும் தங்களது பங்கிற்கு அருவருப்பான செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. சமூக ஊடகங்கள் விரைவாக செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் இந்தக் காலத்தில், இதுபோன்ற அருவருப்பான செயல்களுக்கான காணொலி ஆதாரங்கள் பெருமளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் திசைதிருப்பும் முயற்சிகளும்

ஏராளமான தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஆட்சி மாற்ற முயற்சி’ என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதற்கு ஆதரவாக எந்தவொரு ஆணித்தரமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. வாக்காளர்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் குடிமக்கள் அல்ல என்ற மறைமுகக் குற்றச்சாட்டும் எந்தவொரு உண்மை ஆதாரத்துடனும் நிரூபிக்கப்படவில்லை. ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக உருவெடுத்துள்ள இச்சூழலில், ஆட்சியாளர்களிடமிருந்தோ அல்லது ஆளும் பாஜக-விடமிருந்தோ முறையான பதில் ஏதும் கிடைக்கவில்லை.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இதர தேர்தல் ஆணையர்களின் மத்தியில் மாற்றுக் கருத்துகள் இருந்தன என்பதற்கான தெளிவான ஆதாரங்களும் வெளிப்பட்டுள்ளன. எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் வரம்பிற்கு உட்பட்ட,அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை, ‘ஆட்சியை மாற்றும்’ நோக்கம் கொண்ட வன்முறைச் செயல்கள் என்று முத்திரை குத்த முயல்வது முற்றிலும் முரணானதாகும்.

உண்மையில், அரசாங்கத்தின் கட்டளைப்படி பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அமைதியான போராட்டங்களை அனுமதிக்கும்அரசமைப்புச் சட்டத்தின் தேவையை அப்பட்டமாகமீறியுள்ளன என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன. ‘ஆட்சியை மாற்றும் முயற்சி’ என்ற இந்தக் குற்றச்சாட்டு, எந்தவொரு புறநிலை ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டால் நிலைக்காது என்பது தெளிவு. மேலும்,சமீபகாலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ள அல்லது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டங்களின் தன்மையைக் கவனித்தால், இந்த ‘ஆட்சியை மாற்றும் முயற்சி’ என்ற குற்றச்சாட்டு வெறும் கவனத்தைத் திசைதிருப்பும் ஓர் உத்திஎன்பது புலனாகிறது. வங்கதேசம், நேபாளம்மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் சூழல்கள் முற்றிலும் வேறானவை; அவற்றுக்கிடையேஎந்தவிதமான ஒற்றுமையும் இல்லை.

உலகளாவிய போராட்டங்களும் செர்பியாவின் முன்னுதாரணமும்

உண்மையில், போராட்டங்கள் ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன என்பதற்கு செர்பியாவில்நடந்த நிகழ்வுகள் ஒரு சான்றாகும். இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின்உச்சக்கட்டமாக, ‘ஸ்டூடண்ட் சாப்டர்’ (Student Chapter) என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைந்த மாணவர் குழுக்கள், செர்பியாவின் வலிமைமிக்க தலைவரான அலெக்சாண்டர் வுசிக்கிற்கு எதிராகத் தேர்தலில் வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றன. இந்தத்தேர்தல் முடிவின் விளைவாக அவர் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டார். இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ நாளிதழ் இது குறித்து செய்தி வெளியிடுகையில், “மாணவர்கள்வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவைகள் என்று கூறி, அவர்களைத் தொடர்ந்து சிறுமைப்படுத்த வுசிக் முயன்றார். ஆனால், மாணவர்கள் இந்தத் தொடர் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துவிட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தது.

செர்பியத் தேர்தல் முடிவுகள், வுசிக்கின் ஆட்சியில் நிலவிய சந்தேகத்திற்குரிய நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் மிகப்பெரிய அளவிலான ஊழல் ஆகியவற்றின் மீதான ஆழமான அதிருப்தியே மாணவர்களின் போராட்டத்திற்கும் கிளர்ச்சிக்கும் காரணம் என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. வுசிக்தனது தற்காப்பிற்காக, இது ஒரு ‘ஆட்சி மாற்றத்திற்்கான’ (regime change) முயற்சி என்று வாதிட்டாலும், பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், அல்பேனியா மற்றும்ஐஸ்லாந்து போன்ற ஐரோப்பாவின் பிற பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள், உள்நாட்டு அதிருப்தியின் காரணமாக இன்னும் தீவிரமடைந்து வருகின்றன. உண்மையில், பிரான்சில் நடக்கும் போராட்டங்கள் குடியேறிய இஸ்லாமியர்களின் வன்முறையால் ஏற்படுபவை என்று வலதுசாரி ஆதரவாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரான் மறுத்தார்.மாறாக, அமெரிக்கா-ஈரான் மோதல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற உள்நாட்டு மற்றும் சர்வதேசக் காரணிகளே இந்த அதிருப்திக்கு அடிப்படையாக அமைந்தன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்தியச் சூழலுடனான வேறுபாடு வெளிப்படையாகத் தெரிகிறது. பாஜகவே, தனது கைப்பாவையான ஞானேஷ் குமார் மூலம், முறையான வாக்காளர்களின்வாக்குரிமையைப் பறித்து, தேர்தல் முடிவுகளைத் திரிக்க முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்தில் நடந்தவரையறுக்கப்பட்ட நீதித்துறைத் தலையீடு, நீதித்துறைஆய்வுக்கு உட்பட்ட அந்த நீக்கல் முயற்சி போலியானது என்பதை உண்மையில் காட்டியுள்ளது. எனவே,ஜனநாயகத்திற்கான போராட்டமும், நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வாக்காளர்பட்டியல்களைக் கொண்டிருப்பதும், அரசமைப்புச்சட்டம் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகவே ஆகும். ஞானேஷ் குமாரும் அவரைப் போன்றவர்களும் தங்கள் செயல்களால் அந்த செயல்முறைக்குத் தடையாக இருப்பதுடன், கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்களுக்கு உத்வேகம் அளித்த பாரம்பரிய தேர்தல் செயல்முறையையும் மறுக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முரண்பாடுகளும் வெளிநாட்டு நிதி என்ற பொய்களும்

‘ஆட்சி மாற்றம்’ குறித்த ஆதாரமற்ற அச்சம்,இந்துத்துவா முகாம் வழக்கமாகக் கையாளும் பாசாங்குத்தனத்தையும் இரட்டைவேட பேச்சையும் அடிப்படையாகக் கொண்டது. இந்துத்துவாவாதிகளின் கொள்கை ஊற்றான ஆர்எஸ்எஸ், இப்போது தனது இந்த இரட்டை வேடத்தை வெளிப்படுத்த வேண்டியகட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. அக்டோபர் மாதம் நாக்பூரில் நடைபெற்ற தசரா விழாவில் ஆற்றிய வருடாந்திர உரையில், ஆர்எஸ்எஸ் தலைவர்மோகன் பகவத், அரசாங்கங்களைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட “மேற்கத்தியப் புயல்” மற்றும் “தீயஉலகளாவிய சதி” குறித்து மர்மமான தொனியில் பேசினார். இந்தியா அத்தகைய சதிக்கு இலக்காகியிருக்கலாம் என்பதே அதன் உட்பொருளாக இருந்தது.

இந்த தசரா உரை, மோகன் பகவத் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட முதல் பயணத்தின்போது முன்வைத்த கருத்துகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது.அப்போது அவர் இந்தியாவின் ‘விதி’, ‘கடமை’ மற்றும் ‘பன்முகத்தன்மை’ குறித்துப் பேசியிருந்தார். சர்வதேசபார்வையாளர்களுக்கு ஏற்ப, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘உலகப் பார்வையை’ அவர் மெருகேற்றிக் காட்ட முயன்றார் என்பது தெளிவாகிறது. உண்மையில், அவரது அமெரிக்க உரை என்பது, இந்தியாவின் தற்போதைய அரசியலமைப்புச் சூழலுக்குவெறும் வாய்மொழி ஆதரவை மட்டுமே வழங்கும் ஒரு முயற்சியாகும். ஆனால், களத்தில் தற்போதையஅரசாங்கமும் இந்துத்துவவாதிகளும் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் இதற்கு முற்றிலும் நேர்மாறாகஉள்ளன.

போராட்டக்காரர்கள் வெளிநாட்டு நிதியைப் பெறுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதன் மூலம், ஆட்சி மாற்றம்குறித்த குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்க்கப்பட்டுள்ளது. இது நம்ப முடியாதது. எதிர்க்கட்சிகளைக்குறிவைப்பதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறை, அமலாக்கத்துறை மற்றும் தனக்குக் கீழ் உள்ள மற்ற அனைத்துமுகமைகளையும் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தியதற்காக ஒன்றிய அரசு கண்டனத்திற்குஉள்ளாகியுள்ளதுடன், இந்தஒருதலைபட்சமான நடத்தைக்காக நீதிமன்றங்களிடமிருந்தே கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது. எனவே, உண்மையிலேயே பணம்வந்திருந்தால், அதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையும் அதன் முகமைகளையுமே சாரும். இருப்பினும்,ஆர்எஸ்எஸ்-உடன் தொடர்புடைய அமைப்புகள் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு அறக்கட்டளைகளிடமிருந்து நிதி பெறுவது குறித்த ஆதாரங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. (இது குறித்துநாம் சமீபத்தில் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளோம்.)

சுருக்கமாகச் சொன்னால், ஆட்சி மாற்றத்திற்கான சதி மற்றும் வெளிநாட்டு நிதி குறித்த குற்றச்சாட்டுகள் ஆளும் தரப்பினரின் கற்பனை மட்டுமே. ஆதாரமற்ற இந்த விவரிப்பு, நாட்டிற்குள்ளோ அல்லது உலக அளவிலோ நடக்கும் எதார்த்தத்துடன் எந்த வகையிலும் ஒத்துப்போகவில்லை. இத்தகைய விரக்தியான முயற்சிகளை எதிர்கொள்ள, அவர்களின் தந்திரங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தும் வகையில் இன்னும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வோம்!

அரசமைப்புச் சட்ட நடைமுறைகளால் ஆளப்படும் ஒரு ஜனநாயகத்தில், ஆட்சியாளர்கள் புரிந்திடும் தவறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அதனை மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எதிர்க் கட்சிகள் மேற்கொள்கின்றன. இவற்றின் நடவடிக்கைகள் ‘ஆட்சி மாற்றத்திற்கான’ பின்னணியை வழங்குகின்றன. நம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய ஆட்சி மாற்றங்கள் வழக்கமானவைகளேயாகும்.

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ தலையங்கம், நவம்பர் 1, 2026

தமிழில் சுருக்கம்: ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.