தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவிற்கும் மோடி அரசுக்கும் கருத்தியல் ரீதியான உடன்பாடு உள்ளது: சாமுவேல்ராஜ் சாடல்

16 Jun 2026, 1:03 am
அமெரிக்காவிற்கும் மோடி அரசுக்கும் கருத்தியல்  ரீதியான உடன்பாடு உள்ளது: சாமுவேல்ராஜ் சாடல்
<p><strong>அமெரிக்காவிற்கும் மோடி அரசுக்கும் கருத்தியல் ரீதியான உடன்பாடு உள்ளது: சாமுவேல்ராஜ் சாடல்</strong></p><p>சென்னை, ஜூன் 15- ஈரான் கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், இச்சம்பவத்தைக் கண்டிக்கத் தயங்கும் மோடி அரசைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திருவிக நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் பேசியதாவது: &quot;உலகின் பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா அராஜகமான முறை யில் ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதி யாக ஹார்முஸ் ஜலசந்தியில், இந்தி யர்கள் பணிபுரிந்த வணிகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்காகவும், உலக வளங்களைக் கொள்ளையடிப்ப தற்காகவும் அமெரிக்கா இத்தகைய யுத்தவெறி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்தத் தாக்குதலுக்குக் காரணமான அமெரிக்க அரசை இந்திய அரசு வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சர் இந்தத் தாக்குதலை நியாயப்படுத்திய பிறகும், பிரதமர் மோடி மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. உலக நாடு களின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கத் தவறுவதைப் போலவே, மாநிலங்களின் இறை யாண்மையை மதிக்க மோடி அரசு தவறுவதையும் நாம் காண முடி கிறது. அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மைக்கும், மோடி அரசின் செயல்பாட்டிற்கும் கருத்தியல் ரீதியான நெருங்கிய உடன்பாடு உள்ளது. எனவே, அமெரிக்காவின் யுத்த வெறிக்கும், அதற்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசின் மென்மை யான போக்குக்கும் எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்&quot; என்று அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தர ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், அ.விஜயகுமார், ஆர்.லோகநாதன் கே.எஸ்.கார்த்திஷ்குமார், எல்.பி.சரவணத்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.