உழைக்கும் மக்கள் அரசியல் நம்பிக்கையை வென்றெடுப்போம்! சாமுவேல் ராஜ் நம்பிக்கை
9 Oct 2026, 2:30 am

உழைக்கும் மக்கள் அரசியல் நம்பிக்கையை வென்றெடுப்போம்! சாமுவேல் ராஜ் நம்பிக்கை

திருப்பூர், அக்.8 -உழைப்பாளி மக்களின் அரசியல் நம்பிக்கையை கம்யூனிஸ்டுகள் வென்றெடுப்போம் என்று தோழர் கே.எஸ்.கருப்பசாமியின் 17ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் கூறினார்.

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வேலம்பாளையம் கலையரங்கம் அருகில் புதனன்று தோழர் கே.எஸ்.கே. நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலம்பாளையம் ஏ கிளைச் செயலாளர்ம.பாண்டியராஜ் தலைமைஏற்றார். மண்டலக்குழு உறுப்பினர் வி.ஆர்.சரவணக்குமார் வரவேற்றார். இக்கூட்டத்தில்மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் முதலாவது மேற்கு மண்டலத்தில் சேர்க்கப்பட்ட தீக்கதிர் ஆண்டு சந்தா தொகையை மண்டலக்குழு செயலாளர் ச.நந்தகோபாலிடம் பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் மாநிலக்குழு உறுப்பினர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மண்டலச் செயலாளர் நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.கணேசன், வை.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கே.எஸ்.கருப்பசாமி குடும்பத்தார் மருத்துவர் மரகதம் சாமிநாதன், மருமகன் சிவசாமி, தீக்கதிர் நாளிதழ் 30 ஆண்டுகளுக்கு மேலாக விநியோகம் செய்து வரும் மூத்த தோழர் சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட இந்த பகுதியின் முன்னோடி தோழர்களுக்கு துண்டணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பெருந்திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக உடுமலைகலையரசன் குழுவினரின் பாடல்கள் இசநிகழ்ச்சி நடைபெற்றது.