முந்தய பக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு

9 Jan 2026, 3:41 pm
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு
<p><strong>வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு</strong></p> <p>விருதுநகர், ஜன.9- விருதுநகரில் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடை பெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கூறிய தாவது : சட்டமன்றத் தேர்த லில் பயன்படுத்தப்படும் &nbsp;வாக்குப் பதிவு இயந்தி ரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணியானது கடந்த டிசம்பர் 11 இல் &nbsp;துவங்கி ஜனவரி 6 இல் நிறைவடைந்தது. இதையடுத்து, சரி பார்க்கப்பட்டதில் 1 சதவீத இயந்திரங்களில் தலா 1200 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் தலா ஆயிரம் வாக்குகளும், 2 சத வீத இயந்திரங்களில் தலா 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களின் எண் ணிக்கை ஒப்பிட்டு சரிபார்க் கப்படும். எந்தெந்த இயந்திரங்க ளில் &nbsp;மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என &nbsp;அரசியல் கட்சிப் பிரதிநிதி கள் &nbsp;தேர்வு செய்தனர். &nbsp; இதையடுத்து அனைத்து &nbsp;வாக்குப்பதிவு இயந்திரங்க ளும் &nbsp;பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்படும். &nbsp;வைக்கப்பட்ட இயந்திரங்க ளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிப் பிரதிநிதிக ளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு ஆட்சியர் &nbsp;தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram