முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

10 Nov 2025, 2:46 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாதிரி மக்கள் தொகை  கணக்கெடுப்பு துவங்கியது

சென்னை: நாடு முழுதும் மக்கள் தொகை கணக் கெடுப்பு பணி 2027 பிப்ரவரி மாதம் நடக்கும் என ஒன்றிய  அரசு அறிவித்தது. அதற்கான முன்னோட்டமாக, மாதிரி  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நடத்தப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் திங்கட்கிழமையன்று (நவ.10) மூன்று இடங்களில்  முதல் மாதிரி மக்கள் தொகை கணக் கெடுப்பு பணி துவங்கியது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையிலும், கிருஷ்ண கிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும் மாதிரி மக்கள் தொகை  கணக்கெடுப்பு பணி தொடங்கியது.  இந்த பணியின்  போது 34 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப் பட்டன. வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற் கான முன்சோதனை நவம்பர் 30 வரை நடைபெற உள்ளன. முன்சோதனையில் மொபைல் செயலிகளில் தரவுகள் சேகரித்து டிஜிட்டல் வரைபடங்கள் வரையப்படும். மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி அமைப்பு  என பல்வேறு துறையினர் பணியில் ஈடுபடுவர்.

ஆன்-லைன் மூலம் நிரப்ப வசதி

சென்னை: வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல்  ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கணக்கீட்டு படிவத்தை ஆன்-லைன் மூலம் நிரப்புவதற் கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி  எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் உள்நுழைய ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் “Fill Enum eration Form” என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம். இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். தங்களது கைப்பேசி எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்கா ளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram