சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் திருகொடியேற்ற விழா
16 Jan 2026, 3:00 pm
<p><strong>சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் திருகொடியேற்ற விழா </strong></p>
<p>நாகர்கோவில், ஜன.16- கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை திருவிழா திருகொடியேற்ற விழா வெள்ளியன்று காலை மிக விமர்சையாக நடைபெற்றது. ஜனவரி 16 வெள்ளியன்று அதிகாலை முத்திரி பதமிட்டு,சிறப்பு பணிவிடையை தொடர்ந்து பதியை சுற்றி கொடிப்பட்டம் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இக்கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை தரிசனம் செய்தனர் மேலும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சி படியும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது என அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதி நிர்வாகிகள் தெரித்துள்ளனர்.</p>
