முந்தய பக்கம்

செயற்கையாக உருவாக்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு

30 Jun 2026, 12:57 am
செயற்கையாக உருவாக்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு
<p><strong>செயற்கையாக உருவாக்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு</strong></p><p>பொள்ளாச்சி, ஜூன் 29- சமத்தூர் பேரூராட்சியில் செயற்கை யாக உருவாக்கப்படும் குடிநீர் தட்டுப் பாட்டை சரி செய்ய வேண்டும் என பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சி யரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில், கம் பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சமத்தூர் பேரூராட்சிக்கு தினமும் 2.36 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது வெறும் 30 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக பகல் நேரத் தில் குறைந்தளவு நீரும், இரவு நேரங் களில் முற்றிலும் இல்லாத நிலை உள் ளது. ஆழியாறு நீருந்து நிலையத்தி லிருந்து மற்ற கிராமங்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்பட்டு வரும் நிலையில், சமத்தூர் பேரூராட்சி மட்டும் புறக்கணிக்கப் படுகிறது. இதுகுறித்து பலமுறை அதி காரிகளிடம் புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் தட்டுப்பாட்டை உடனடி யாக நீக்கி, பொதுமக்களுக்கு தடை யின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத் தப்பட்டுள்ளது. முன்னதாக, சார் ஆட்சியரிடம், சமத் தூர் பேரூராட்சி தலைவர் க.காளி முத்து, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்று திரண்டு மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram